இலங்கைஉலகம்
Trending

இலங்கையர் ஒருவர் ருமேனியாவில் உயிரிழப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டிலுள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குறித்த இலங்கையர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகேஷ் தனஞ்சய ஹெட்டிகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ருமேனியா சென்ற நிலையில் அங்கு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

சம்பவத்தன்று, குறித்த ஊழியர் தனது ஸ்கூட்டரில் வாடிக்கையாளருக்கு உணவை விநியோகம் செய்யச் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறி விழுந்த ஊழியருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு சென்ற அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்த ஊழியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

உணவு விநியோக ஊழியர்கள் நேரக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இத்தகைய விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button