இலங்கை
Trending

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

திருகோணமலை கந்தளாயிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உணவு உட்கொண்ட மாணவிகள் 16 பேருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் காலை உணவோடு சுமார் 150 மாணவிகளுக்கு அன்னாசிப்பழமும் வழங்கப்பட்டுள்ளது.

அதனை உட்கொண்ட பின்னர், 16 மாணவிகளின் உடலில் திடீரென ஒருவகை அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக கந்தளாய் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button