உலகம்
Trending

‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சுவிட்சர்லாந்து ‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் ஈழத்து புகழ்பூத்த இளம் சொற்பொழிவாளர் தமிழகரன் சனாவின் ஆன்மிக செற்பொழிவு நேற்று(26) இடம்பெற்றது.

சூரிச் சிவன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரதோஷ விரத வழிபாட்டைத் தொடர்ந்து, ஈழத்திலிருந்து வருகை தந்த இளம் சொற்பொழிவாளர் தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது.

சொற்பொழிவைத் தொடர்ந்து, தமிழகரன் சனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற ஆன்மிக உணர்வோடு,

சூரிச் சிவன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ கைலாசநாதர் குருக்கள் மற்றும் ஏனைய குருமார்களான முரளி குருக்கள், ரவீந்திர குருக்கள்,

சைவத்தமிழ் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னராஜா இராதாகிருஷ்ணன், சைவத்தமிழ் சங்கத் தொண்டர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button