இலங்கை
Trending

நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்துவைத்தார்.

இதற்கான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று(30) சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் ஆரம்ப பிரிவிற்கான ஐந்து வகுப்பறைகளைக் கொண்டதாக 24 மில்லியன் ரூபாவில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் திருமதி குணாளினி கோவிந்தராஜன் தலைமை இடம்பெற்ற நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், மாகாண கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நட்புறவுப் பாலம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவுப் பாடசாலைகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலருணவு அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனையடுத்து நெடுந்தீவிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை மற்றும் ஆசிரிய பற்றாக்குறை தொடர்பாக ஆராய்ந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button