Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

பாரசீகம் எங்களுடையது, எச்சரித்தது ஈரான்: வெளியேறிய அமெரிக்கா!

ஈரானின் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர்க்கப்பல், அங்கிருந்து உடனடியாக வெளியேறி அரேபிய கடல் பகுதிக்குச் சென்றுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தனது கடற்படை ஒத்திகையைத் தொடங்கியது.

இதில் நேரடித் தளவாடங்கள் (Live ammunition) பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் ரஷ்யா மற்றும் சீனப் படைகளும் இந்த ஒத்திகையில் இணையவுள்ளன.

இந்நிலையில்,”தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்கவே” அமெரிக்கக் கப்பல்களை பின்வாங்க உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் கடற்படைத் தளபதி இந்த விவகாரம் குறித்து மிகக்’ கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

​பாரசீக வளைகுடா ஈரானின் சொந்தப் பகுதி, அதன் வான்வெளி மற்றும் கடல் ஆழம் மீது ஈரானுக்கு முழு அதிகாரம் உண்டு.

​ அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அங்கு இருப்பதை ஈரான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவை அங்கு இல்லாதது போன்றே தங்களது ராணுவப் பயிற்சிகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

​ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடாத்தும் இந்த ராணுவப் பயிற்சி, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button