இலங்கை
Trending

ஹென்டர் வாகனத்தில் லொறி மோதி கவிழ்ந்து விபத்து; இருவர் பலி : ஒருவர் படுகாயம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

நுரைச்சோலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதிய பின்னர் குறித்த லொறி ஹென்டர் வாகனத்தின் மீது கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button