உலகம்
Trending

நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள்: அறுவர் பலி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

உலங்கு வானூர்திகள் இரண்டு நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸில் – ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட இரு உலங்கு வானூர்திகளும், அங்கிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளன.

இதனால் இரு உலங்கு வானூர்திகளிலும் இருந்த அறுவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் உலங்கு வானூர்திகள் விழுந்து நொறுங்கியதில் அங்கிருந்த 20 மின்சார கார்கள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்துள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button