உலகம்
Trending
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், இயற்கை பேரழிவில் சிக்கி 11 பேர் வரை காணாமல் போயுள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மேலும் நாட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நேபாளத்திலுள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து நீடிப்பதால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow Us





