
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது எனத் தெரிவித்து தெல்லிப்பழையில் போராட்டம் நேற்றைய தினம் (08) இடம்பெற்றது.
தெல்லிப்பழை சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர்
தெல்லிப்பழை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர்.



அங்கு வலிகாமம் வடக்கில் மதுபான சாலைக்கான அனுமதி வழங்க கூடாதெனத் தெரிவித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Follow Us





