பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: 6 ஆயிரத்து 100 ற்கு மேற்பட்டோர் கைது!

பிரான்ஸில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது.
பாடசாலைகளில் “சிறந்த கல்வி வசதிகளை இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை, பாடசாலைக் கட்டடங்களை மேம்படுத்துதல் வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


அந்த வகையில் நேற்றைய தினம் (06) இடம்பெற்ற போராட்டங்களில், நாடு முழுவதும் 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
போராட்டங்களின் போது சில இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
இதுவரை இடம்பெற்ற போராட்டங்களில் 215க்கும் மேற்பட்ட மாணவர்களும், 700க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களும், காயமடைந்துள்ளனர்.
போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை 6 ஆயிரத்து100 ற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

