உலகம்
Trending

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அமெரிக்கா தனது இராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சுமார் 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

ஈரானும் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய்க் கப்பல்களை தாக்கி வருகின்றது.

இதனால், சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில், ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை கடுமையாக்க போவதாக ட்ரம்ப் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும், நேற்று (23) முதல் ஈரானின் விமானப் போக்குவரத்து சேவையை முடக்கப் போவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button