உலகம்
Trending

அண்ட்ரூவின் கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்- அமெரிக்காவில் எவரும் கைது செய்யப்படுவார்களா?

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் தம்பியும், பதவி இழந்த இளவரசருமான அண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரது பிறந்த நாளான நேற்றைய தினம் (19) காலை 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அண்ட்ரூ நேற்றைய தினமே, மாலை 6.50 மணியளவில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அண்ட்ரூவின் கைது குறித்து முன்னரே “பக்கிங்காம்” அரண்மனைக்கு தகவலளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரது கைது மன்னர் சாள்ஸ்ஜை மட்டுமல்ல, இளவரசர் வில்லியம், அண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்ட்ரூவின் கைது பிரித்தானியாவில் மட்டுமல்லாது அவரது கைதுக்குக் காரணமாக இருந்த எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்ட அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த அண்ட்ரூ கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் ஏன் எவரும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன.

https://www.facebook.com/share/p/1AvkGFg8cE

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button