
ஜாவா கடற்பகுதியில் காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (13) மீட்டுள்ளனர்.
இதுவரை 103 பயணிகள் மீட்க்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்,140 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பல், விபத்துக்குள்ளாகி கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு இழந்திருந்தது.
இதனையடுத்து, மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறன.
Follow Us





