இலங்கை
Trending

இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையில் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிட்டுள்ளது.

இன்று (15) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button