
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று (15) ஆரம்பமானது.



நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அவர் உண்ணா விரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமான்ன.
மூத்த போராளியும், மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26 ஆம் திகதி காலை 10.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.





