இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக் 34 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

குஜராத் டைட்டன்ஸ்
அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 34 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேற்று இரவு (24) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றுபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக, சாய் சயந்தன் 58 பந்துகளில் 100 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பாக, விராட் கோலி 44 பந்துகளில் 100 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.

இந்த போட்டியில் ஆட்ட நாயகராக விராத் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button