இலங்கை
Trending

உதயகுமார் – குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

உதயகுமார் – குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளிகளாக காணப்பட்ட 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்டகால விசாரணையின் பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் புத்திக ஸ்ரீ ராகலவால் இந்தத் தீர்ப்பு நேற்று (08) வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததோடு, மேலும் ஒருவர் முன்னிலையாகாத நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு, கொழும்பு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட தாராவத்தை பகுதியில் ஹேவா படகொடகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button