இலங்கை
Trending

வயாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணிகள் மீள ஒப்படைக்கப்படும் வரை, ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் வரை தொடர் போராட்டம் தொடரும் எனவும் காணி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இன்றைய போராட்டத்தின்போது இதன்போது வயாவிளான் இராணுவ முகாம் அதிகாரிகள் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

இதனிடையே, மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button