
ஹோர்முஸ் நீரிணையிலுள்ள லராக் தீவு அருகே அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானின் புரட்சிகர காவல்படை கடல் கண்ணிவெடிகளோடு கூடிய ஏவுகணைகளை ஏவுவதற்குத் தயாராகி வந்ததைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இராணுவ நடவடிக்கைகளை குறைத்து, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக கடும் பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.





