இலங்கை
Trending

சாவகச்சேரி நகரசபை தவிசாளரால் தொடரப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது யாழ் மேல் நீதிமன்றம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கியமை, உறுப்புரிமையை வறிதாக்கியமை ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

எதிர்மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் தடையுத்தரவு வழங்கமுடியாதென தெரிவித்தே மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இதன்போது மன்றில் ஆஜரான மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், தனது நீண்ட சமர்ப்பணங்களை செய்தார்.

அதன்போது அவர், மனுதாரரான சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், உப தவிசாளர் பதவியில் நீடிக்கவும்,
நகரசபை உறுப்பினர் பதவியில் நீடிக்கவும், உப தவிசாளர் தெரிவை நடத்தாமல் இருக்கவும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மன்றைக் கோரினர்.

அதனை ஆராய்ந்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்களின் விளக்கத்தைக் கேட்காமல் இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென நீதிபதி எஸ்.சதீஸ்தரன் தெரிவித்து 14 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசியதாக, நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளரின் பதவியை நீக்கியும்,நகர சபை
உறுப்புரிமையை வறிதாக்கியும் வடக்கு மாகாண ஆளுநர் வர்த்தமானி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button