இலங்கை
Trending

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் பதவி வழக்கு, 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஞானப்பிரகாசம் கிஷோரால், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு, கட்டளைக்காக ஓகஸ்ட் மாதம் 19 திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம்(05) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று(05) வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது வடமாகாண யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், கட்டளைக்காக வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button