இலங்கைஉலகம்

3ஆவது சர்வதேச சட்டத்துறை மாநாடு யாழ்.பல்கலையில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தும் 3ஆவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026′ இன்று (24) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஹூவர் கலையரங்கில் ஆரம்பமாகியது.

இந்தநிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் இடம்பெறுகிறது.

இன்றைய மாநாட்டின் முதல் நாள் அமர்வில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி கோசலை மதன், சட்டத்துறை விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள்,வெளிநாட்டு பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button