இலங்கை
Trending

கடல் அட்டை உற்பத்தியாளர்கள் 120 பேருக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கடல் அட்டை உற்பத்தியாளர்கள் 120 பேருக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று முன் தினம்  (18) இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ்,20 உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு ஆரம்பக்கட்ட தள அனுமதிக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், அவர்கள் கடல் அட்டை வளர்ப்பிற்கான நீரியல் வளர்ப்பு முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்னேறவுள்ளனர்.

இந்தநிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மபிரிய, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரத்தினம்,

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவி பணிப்பாளர் பீ. நிருபராஜ், ஊர்காவற்துறை கடற்றொழில் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button