
இந்தியாவின் தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், அங்குள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இலங்கையில் சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை மேற்கொள்ள தென்னிந்திய முதலீட்டாளர் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஜி.கணேஷநாதனின் முயற்சியால் தென்னிந்தியாவை சேர்ந்த தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்தக் குழுவினர் இலங்கையில் முதலீடுகளை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்னிந்திய தூதுக்குழு, அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரட்ன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow Us





