இலங்கை
Trending

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை எச்சரிக்கை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர் என சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது அஞ்சல் உறைகள் சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, சந்தேகத்திற்குரிய பொதிகளைக் கண்டறிய சுங்கத்துறை ஆய்வுக் கருவி தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது.

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய அஞ்சல் உறைகள் அதிகளவில் வருவதை அவதானித்துள்ளோம்.

தனித்தனி உறைககளிலுள்ள போதைப்பொருட்களின் அளவு குறைவாகத் தோன்றினாலும், அவை இறுதிப் பயனாளியைச் சென்றடைந்து, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button