
நெல்லுக்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, மட்டக்களப்பு நகரில் இன்று(23) கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பித்த பேரணி, மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.
அங்கு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
இதன்போது, தமது கோரிக்கை மனுவை பிரதேச செயலாளரிடம், விவசாயிகள் கையளித்தனர்.
Follow Us





