
மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சாதனைப் பெண்களை கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்புத்தனர்.



யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும்,
“பெண்மையை நேசிப்போம்” என்ற நடன நிகழ்வும் சபையோரைக் கவர்ந்தன.



அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சிவானி சண்முகதாஸின் “பொருளாதார விடுதலையே பெண்களின் அதிகாரம்; நெருக்கடியான சூழலில் உரிமை, சமத்துவம், நீதியை வலுவூட்டுதல்” எனும் தொனிப்பொருளில் சிறப்பு கருத்தரங்கு இடம்பெற்றது.



மேலும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் பெண் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








