இலங்கை
Trending

செம்மணியில் சிறுவர்கள் அடங்கலாக 6 என்புக்கூடுகள் நேற்று முன் தினம் மீட்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் இடம்பெற்றன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய 36ஆவது நாளான நேற்று முன் தினம் புதிதாக
ஒரு வயோதிபரின் என்புக்கூட்டோடு, சிறுவர்களின் என்புக கூடுகள் அடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button