
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் “கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” (Education Co-operative Society – EDCS) யாழ்.சாவகச்சேரியில் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.



இலங்கையில் திறக்கப்பட்ட 26 ஆவது கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகமாகவும், யாழ்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அலுவலகாகவும் இது அமைந்துள்ளது.



இந்த அலுவலக திறப்பு விழாவில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்
எம்.ஜீ.லால்குமார, கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் சந்தன குணசேகர ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், ஆசிரிய சேவைச் சங்க பிரநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





