விளையாட்டு
Trending

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் நாளை (13) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதவுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button