
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் 32 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு 700-ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கரீபியன் கடற்கரை பகுதியான மோரோன் (Moron) நகருக்கு மேற்கே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று(25) ஏற்பட்டுள்ளன.


தலைநகர் கராகஸ் (Caracas) உட்பட பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் முக்கிய நுழைவாயிலான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் பலத்த சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதனையடுத்து இடைக்கால ஐனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.





