குற்றவியல்

போதைப்பொருளுடன் யாழின் பிரபல வர்த்தகரின் மகன் கைது! – பதியப்படாத புதியவாகனமும் மீட்ப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்றிரவு (27) கைதுசெய்யப்பட்டார்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும்,சந்தேக நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும், ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button