இலங்கை
Trending

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அல்லது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக உரிய கொள்முதல் ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் பெறப்பட்ட விநியோகஸ்தர்களின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் விலை, பொருட்களின் வகை மற்றும் அளவு, அத்தோடு தொடர்புடைய தொகுதி இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த ஆவணங்கள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button