
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையும் ட்ரம்ப் இட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட தற்போது “மிகவும் சூடாக” இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதற்கு புதிய பெயரைச் சூட்டுவது தொடர்பான ட்ரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





