இலங்கை
Trending

செம்மணிப் புகைகுழியிலிருந்து தாயத்துடன் கூடிய என்புக் கூடு மீட்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி,நேற்றைய (01) அகழ்வின்போது, கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் கூடிய என்பு கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 09ஆம் திகதி வரை, 12 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

அந்தநிலையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது கழுத்து பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் அது முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழி பகுதிக்குள் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில என்பு கூடுகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்து அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால், அவை இன்னும் அடையாளப்படுத்தவில்லை.

இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 13 நாட்களில் 22 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு,அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி,நாணய குற்றிகள்,ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதேவேளை செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான காலப் பகுதியில் 262 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button