இலங்கை
Trending

கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கலகொட அத்தே ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(24) நிராகரித்துள்ளது.

மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்திருந்த சிறைத்தண்டனையும் அபராதத்தையும் இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தேரர் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதாகக் கருதப்பட்ட சம்பவம் தொடர்பாக,

கொழும்பு நீதவான் நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீட்டாளரான பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதனால், ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு, முன்னர் விதிக்கப்பட்டிருந்த 9 மாத சிறைத்தண்டனையும் அபராதமும் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button