இலங்கை
Trending

சட்டவிரோதமாக கோடிகளைச் சேர்த்தவருக்கு அதிர்ச்சி - பறிமுதல் செய்த அரசு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 (28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று(19) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் மறைந்திருப்பதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் குறித்த நபர் தொலைபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் நபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கையில் இயங்கும் ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து இவர் பணத்தை சேகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இன்று(20) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button