
FIFA கால்பந்து தொடரின் குழு ‘I’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், நோர்வே அணி 3–2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


போட்டியின் முதல் பாதியின் 43 ஆவது நிமிடத்தில் நோர்வே அணியின் மார்கஸ் ஹோம்கிரென் பெடர்சென் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே எர்லிங் ஹாலண்ட், நோர்வே அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செனகல் அணியின் இஸ்மைலா சார் 53 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் பதிலடியாகக் கொடுத்தார்.
எனினும், 58 ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து நோர்வேயின் முன்னிலையை 3–1 என உயர்த்தினார்.
போட்டியின் கூடுதல் நேரத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சார் தனது இரண்டாவது கோலை பதிவு செய்த போதிலும், செனகல் அணியால் ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.
இறுதியாக நோர்வே 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
FIFA உலகக் கிண்ணம் தொடரின் குழு I பிரிவு பிறிதொரு போட்டியில், பிரான்ஸ் அணி, ஈராக் அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி, போட்டியில் சிறப்பாக செயல்பட்டு மூன்று கோல்களைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி குழு I-இல் தனது முன்னிலை வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.





