இலங்கை
Trending

செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு (19) நிறைவடைந்தன.

நேற்றைய அகழ்வின்போது முன்னர் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தாயத்து ஒன்று, காசு ஒன்று, செப்பிலான மோதிரங்கள் மூன்று என்பனவும் அகழ்ந்து எடுக்கப்பட்டிள்ளன.

முதலாவது கட்டத்தில் 9 நாட்களும், 2 ஆவது கட்டத்தில் 45 நாட்களும், 3 ஆவது கட்டத்தில் 56 நாட்களுமாக 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

அதற்கமைய மூன்று கட்டங்களிலும் மொத்தமாக 583 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அடுத்த கட்ட அகழ்வுப் பணி தொடர்பான தீர்மானம் எடுக்கும் நிர்வாக்க் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகள் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், களனிப் கல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா,

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் மருத்துவத்துறை மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button