இந்தியாஇலங்கைஉலகம்
Trending

கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,996 பக்தர்கள் வருகை தருவர்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 பக்தர்கள் வருகைதரவுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா, நாளை(27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து ஒன்பதாயிரம்(9,000) பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கமைய, இந்தியாவிலிருந்து 92 விசைப் படகுகளில் 3 ஆயிரத்து 589 பேரும், 26 நாட்டுப் படகுகளில் 307 பேரும் பயணிப்பதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வருகைதரும் பக்தர்கள் நாளை(27) காலை இராமேஸ்வரத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button