இலங்கை

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் – மாநகர உறுப்பினர் உதயசிறி எச்சரிக்கை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ். குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமாரு உதயசிறி எச்சரித்துள்ளார்.

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் எவையும் இல்லையெனவும், நீர் விநியோகிக்கும் வானகம் ஒன்றே தற்காலிக தீயணைப்பு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1983 ஆம் ஆண்டு யாழில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்று அதன்பின்னர் ஏற்படவில்லை எனவும், ஆனால் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் சக்தி யாழ்.மாநகர சபையிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆகவே, யாழ்.மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவை தனியான பிரிவாக அமைத்து அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button