இலங்கை
Trending

தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பின்போது ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதற்கு, வலிகாமம் வடக்கு பிரதேச சபை எடுத்த நடவடிக்கைக்கு எதிராகப் பொலிஸார் தொடுத்த வழக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று(06) தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் சபைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கிலிருந்தும் விடுவித்துள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்தன.

காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.

இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை அகற்றுமாறும், இல்லையேல் பிரதேச சபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருசெய்துள்ளதும் அனுப்பட்டது.

பிரதேச சபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர்.

இந்தநிலையில் மல்லாகம் நீதிமன்றம் குறித்த வழக்கை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button