இலங்கை
Trending

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையில் இருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்திய கும்பல் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாடு நாகைபட்டினத்திற்கு நேற்று(17) கப்பலில் செல்ல தயாரான சந்தர்ப்பத்திலேயே இவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

26 பயணிகளில் 17 பேரிடம் மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்பிற்குள் தங்கம் இருந்தமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து 26 பயணிகளும் மேலதிக ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களில் ஆறு பேர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த நான்கு ஆண்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களுமே தங்கத்தை விழுங்கியிருந்தனர்.

அதனையடுத்து சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button