இலங்கை
Trending

யோஷித ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்‌ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி பெற்றமை தொடர்பான பொறிமுறை குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணைகளுக்காக யோஷித ராஜபக்‌ஷ இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகுமாறு யோஷிதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கொன்றில் ஆஜராக வேண்டியுள்ளதால் தம்மால் வரமுடியாதென அவர் நேற்று(16) ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

அதற்கமைய இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஷவிற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button