இலங்கை
Trending

பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

நாட்டில் அதிகபட்சமான வெப்பநிலை பொலன்னறுவையில் 37.2 செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ் வெப்பநிலையும், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ் வெப்பநிலையும், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் வெப்ப நிலைகளுமான பதிவாகியுள்ளன.

நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

பண்டாரவளையில் 28.8 செல்சியஸும், கட்டுக்கஸ்தோட்டையில் 29 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button