இலங்கை
Trending

அனர்த்ததால் 7 பேர் உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதோடுஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கிருந்த இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வட்டவளை, ஞானானந்த கம வீதியிலுள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காகவுள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில், வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button