இலங்கை
Trending

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன், யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக இணைத்தமை மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியமை

ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் மாதம் 16 மற்றும் 22ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொடவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் அந்த திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகாததால் இன்று (03) அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button