இலங்கை
Trending

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான பங்காகவுள்ள போதிலும், பொதுமக்கள் ஏனைய பொதுவான ஆபத்துக்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.

உயரமான இடங்களிலிருந்து தவறி வீழ்தல்,நீரில் மூழ்குதல்,மின்சாரத் தாக்குதலுக்குள்ளாதல்,பாம்புக்கடிக்குள்ளாதல் என்பன ஏனைய ஆபத்துக்களாக அமைந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button