இந்தியாஇலங்கைவிளையாட்டு
Trending

பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வருகை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 20 க்கு 20 போட்டிக்காக இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான போட்டி நாளை(15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளுக்காக விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், இலங்கை அரசின் தலையீட்டால் தீர்மானத்தை மாற்றிக்கொண்டு போட்டியில் விளையாட ஒத்துக்கொண்டது.

அதனை தொடர்ந்து பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிக்கு செல்லும் இரசிகர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button