இலங்கைஉலகம்குற்றவியல்
Trending

கடந்த நான்கு மாதங்களில் போதைப்பொருட்களோடு 102,900 பேர் கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)
கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.

இதன்போது, 526 கிலோகிராம் ஹெரோயின், 1,419 கிலோ கிராம் ஐஸ், 3,548 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கைது செய்யப்பட்ட 2,400 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button